சானக்கலே 1915 பாலம் (துருக்கி:Çanakkale 1915 Köprüsü)டார்டனெல்லஸ் பாலம் (துருக்கிய:Çanakkale Boğaz Köprüsüவடமேற்கு துருக்கியில் உள்ள சானக்கலேவில் கட்டப்பட்டு வரும் ஒரு தொங்கு பாலம் ஆகும். லப்சேகி மற்றும் கெலிபோலு நகரங்களுக்குச் சற்று தெற்கே அமைந்துள்ள இந்தப் பாலம், மர்மாரா கடலுக்குத் தெற்கே சுமார் 10 கி.மீ (6.2 மைல்) தொலைவில் உள்ள டார்டனெல்லஸ் ஜலசந்தியின் குறுக்கே அமையும்.
பாலத்தின் பிரதான எஃகு விட்டங்களைத் தூக்கும் சட்டகத்தின் கட்டுமானப் பணி டோர்மன் லாங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐஎன்ஐ ஹைட்ராலிக் நிறுவனம், பாலத்தின் தளத்தை அமைக்கும் கேன்ட்ரிகளுக்காக, 420,000 Nm ஹைட்ராலிக் டிரான்ஸ்மிஷன்களால் நேரடியாக இயக்கப்பட்டு, 49 டன் சுமைகளைத் தூக்கும் திறன் கொண்ட 16 முக்கிய எஃகு இழை சக்தி வின்ச்களை வடிவமைத்துத் தயாரிக்கிறது.
மேற்கோள்கள்:https://en.wikipedia.org/wiki/%C3%87anakkale_1915_Bridge
பதிவிட்ட நேரம்: நவம்பர் 27, 2020
